
ஆசிரியரின் தாக்குதலுக்குள்ளான மாணவன் வைத்தியசாலையில் அனுமதி
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் 10 A வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை ஆசிரியர் தாக்கியதில் குறித்த மாணவன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை பாடசாலையில் இடம் பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
குறித்த மாணவனை தடிகளால் பலமுறை தாக்கிய ஆசிரியர் தடி முறிந்த நிலையில் தனது கையால் மாணவனின் நெற்றியில் அறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் குறித்த பாடசாலையின் அதிபரை தொடர்பு கொண்டு கேட்டபோது, குறித்த சம்பவம் தொடர்பில் தான் அறியவில்லை எனவும், விடயம் தொடர்பில் ஆராய்வதாகவும் தெரிவித்தார்
