
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் : இலங்கையில் அச்சம்
இந்தோனேசியா சுமத்ரா தீவின் அருகே 6.9 ரிக்டர் அளவுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டடங்கள் குலுங்கின எனவும் பாதிப்புகள் குறித்த தகவல் வெளியாகவில்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை எனவும் கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் எதிர்கால அறிவிப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
