
கொமர்ஷல் வங்கியினால் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் கெளரவிப்பு
-மன்னார் நிருபர்-
மன்னார் மாவட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகள் பெற்ற மாணவ மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு மன்னார் கொமர்ஷல் வங்கியின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை மன்னார் கொமர்ஷல் வங்கியின் முகாமையாளர் தலைமையில் மன்னார் பிரதான கிளையில் இடம் பெற்றது
2021 ஆண்டு இடம்பெற்ற புலமை பரிசில் பரீட்சையில் பாடசாலை ரீதியாக அதி உயர் சிறந்த பெறுபேறுகளை பெற்ற 13 மாணவ, மாணவிகள் கெளரவிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக சவிர்தாசம் செல்டன் இசிறப்பு விருந்தினர்களாக மடு வலயக் கல்வி பணிமனையின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஜுடிற், மன்/சித்திவிநாயகர் இந்து கல்லூரி அதிபர் பாலபவன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.