வீட்டில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கோடா மீட்பு

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை விழிசிட்டி பகுதியில் இருந்து 150 லீற்றர் கோடா மீட்கப்பட்டுள்ளது.

வீட்டிற்கு பின்னால் கிடங்கினுள் குறித்த கோடா புதைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

மானிப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மானிப்பாய் பொலிஸாரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது 35 வயதுடைய சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.