
சத்தமாக பாடாததால் மாணவனை தாக்கிய ஆசிரியர்
தேசிய கீதத்தை சத்தமாக பாடாததால் ஆசிரியர் ஒருவர் மாணவரை கடுமையாக தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அவிசாவளை – ஹங்வெல்ல பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காலை பாடசாலை ஆரம்பிக்கப்படும் போது தேசிய கீதத்தை மாணவர்கள் பாடிக்கொண்டிருந்த போது உரக்க பாடுமாறு தெரிவித்து குறித்த ஆசிரியர் மாணவர் ஒருவரின் தலையில் தாக்கியதாக பெற்றோர் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் காரணமாக மாணவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
