படகு விபத்தில் சிறுமி உயிரிழப்பு , இரு யுவதிகளை காணவில்லை
சூரியவெவ, மஹாவெலி கடார வாவியில் இன்று சனிக்கிழமை காலை படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் மூன்று சிறுமிகள் காணாமல் போயிருந்த நிலையில் , 10 வயதான சிறுமியின் சடலம் பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வாவியில் மூழ்கி காணாமல்போயுள்ள 17 மற்றும் 18 வயதான மேலும் இரு யுவதிகளை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த சம்பவம் இடம்பெற்ற போது மீன்பிடி படகில் 08 மாத குழந்தை உட்பட 08 பேர் பயணித்துள்ளதாக, தெரியவருகின்றது.
குழந்தை உட்பட ஏனையவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
குருநாகல் – பிகிம்புவ பகுதியிலிருந்து சூரியவெவிலுள்ள உறவினர் வீட்டிற்கு அன்னதானம் வழங்கும் நிகழ்விற்காக தோணியில் சென்று கொண்டிருந்த போது இந்த அனார்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
சூரியவெவ பொலிஸின் உயிர்காப்பு பிரிவினர் மற்றும் கடற்படையினர் இணைந்து காணாமல் போனவர்களை தேடும் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.