
திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது
-பதுளை நிருபர்-
கோணக்கலை மேமலை கதிர்வேலாயுத ஆலயம் கடந்த 7 ம் திகதி இரவு உடைக்கப்பட்டு அம்மன் சிலையிலிருந்த தாலி ஒன்றும் ஆறு மணிகள் மற்றும் தங்க மாலை ஒன்றும் களவாடப்பட்டிருந்த நிலையில் குறித்த திருட்டு சம்பவம் தொடர்பாக ஆலய நிர்வாகம் மற்றும் பொது மக்களினால் பசறை பொலிஸ் நிலையத்தில் கடந்த 8 ம் திகதி முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது விசாரணைகளை ஆரம்பித்த பசறை குற்றத்தடுப்பு பொலிஸார் சந்தேகத்தின் பேரில் நமுனுகுலை கனவரல்ல பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய நபரையும், கோணக்கலை வீரன்புரம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இருவரையும் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்ட போது, அவர்களிடமிருந்து மேற்குறிப்பிட்ட தங்க நகைகள் கைப்பற்றப்பட்டதோடு, மேலும் இவ் இருவரும் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடொன்றையும் உடைத்து அவ்வீட்டில் இருந்த தங்க நகைகளையும் திருடி வங்கிகளிலும் மற்றும் ஈட்டு கடைகளிலும் தங்கங்கள் உருக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன .
குறித்த இரு சந்தேக நபர்களையும் நாளை பதுளை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
