
அம்பியூலன்ஸ் வண்டி மீதுதாக்குதல் : சந்தேக நபர் கைது
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை -மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலைக்கு சொந்தமான அம்பியூலன்ஸ் வண்டி மீது தாக்குதல் நடாத்திய சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இருந்து நேற்று வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு நோயாளர்களை ஏற்றிச் செல்லும் போது கன்னியா பகுதியில் மதுபோதையில் வீதியோரத்தில் நின்று கொண்டிருந்த இளைஞர் பொல்லால் அம்பியூலன்ஸ் வண்டியை தாக்கியதாக ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
இத்தாக்குதலில் அம்பியூலன்ஸ் வண்டியின் கண்ணாடிகள் உடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கன்னியா- 06ம் கனுவ பகுதியைச் சேர்ந்த உதய சந்ரன் சுரேஸ் குமார் (36 வயது) என்பவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
