மதுப்பிரியர்களை விரட்டியடித்த மட்டக்களப்பு மாநகரசபை தீயணைப்பு பிரிவினர்

பேருந்து நிலையத்தில் அமர்ந்து மதுபானம் அருந்தியவர்களை அவ்விடத்தில் இருந்து மட்டக்களப்பு மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் விரட்டியடித்துள்ளனர்.

மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில் அமர்ந்து சிலர் மதுபானம் அருந்துவதாக மட்டக்களப்பு மாநக சபைக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து, அங்கு விரைந்து சென்ற மட்டக்களப்பு மாநகர தீயணைப்பு பிரிவினர் நீர்த்தாரை பிரயோகம் செய்து அவர்களை விரட்டியடித்துள்ளனர்.

இவ்வாறான சமூக விரோதச் செயல்கள் கண்டிக்கத்தக்க ஒன்றாகும். தற்போது எமது சமூகம் போதைப்பொருள் பாவனையில் மூழ்கிச் சீரளியும் நிலையில், மாணவர்களும் அதற்கு அடிமையாகி இருப்பது மனவேதனையாக உள்ளது.

இவ்வாறு இருக்க பொதுமக்கள் நடமாடும் இடங்களில் சமூக அக்கறை இல்லாத சில நபர்களால் எமது சமூகம் பெரிதும் பாதிப்படைகிறது. இந்த நிலை மாற வேண்டும், என மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்துள்ளார்.