இரண்டு மாணவர்களுக்கு இடையில் மோதல் : ஒருவர் பலி

பாடசாலையொன்றில் இரண்டு மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் அம்பாறை – திருக்கோவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, 13 வயதான மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோதலில் ஈடுபட்ட மற்ற மாணவன் காயமடைந்ததுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மாணவரின் சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.