மட்டக்களப்பிலிருந்து 10.3 மில்லியன் டொலர்கள் வருமானம்

இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் மட்டக்களப்பு – வாகரை பச்சை வெள்ளரி ஏற்றுமதி மூலம் 10.3 மில்லியன் டொலர்களை ஈட்டியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

500 ஏக்கரில் 500 விவசாயிகள் பயிரிட்டுள்ளதாகவும், இதன் அறுவடை ஜப்பான் உட்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 3 வருடங்களில் பச்சை வெள்ளரிக்காய் திட்டத்தினால் இலங்கைக்கு 33 மில்லியன் டொலர் வருமானம் கிடைத்துள்ளது.