
தாய்லாந்து தூதுவரின் இல்லத்துக்குள் நுழைந்து திருட்டு
கொழும்பு 7 மலர் வீதியிலுள்ள தாய்லாந்து தூதுவர் Poj Hanpol இன் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் திருடன் ஒருவன் அத்துமீறி நுழைந்து சுமார் ரூ.3 இலட்சம் பணம் மற்றும் அங்கிருந்து பெறுமதியான பொருட்களையும் திருடிச் சென்றுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.00 மணிக்கும் 7.00 மணிக்கும் இடையில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், திருட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருடப்பட்ட பொருட்களில் கையடக்கத் தொலைபேசி, நினைவுப் பரிசு, தாய்லாந்து நாணயம் மற்றும் இலங்கை ரூபா என்பன உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வீட்டிற்கு வெளியில் நின்றிருந்த போதும், மற்றொரு தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் வீட்டிற்குள் இருந்த போதும் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
