ரோகித் ஷர்மாவிற்கு காயம்

வரும் நவம்பர் 10ம் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் மோதவுள்ளது.

இந்நிலையில் இன்று காலை நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தின் போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் வலது கையில் காயம் ஏற்பட்டது. இதனால் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறினார்.

இதனால் அவர் டி20 உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், அடுத்த ஒரு மணி நேரத்திலேயே மீண்டு வந்து பயிற்சியை மேற்கொண்டார். ஆனாலும் காயத்தின் தன்மை குறித்தே அடுத்தக்கட்ட நிலவரம் தெரியவரும் எனக் கூறப்படுகிறது.

ரோஹித் ஷர்மா பங்கேற்க இயலாமல் போனால், தீபக் ஹோடா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறக்கப்படும் வாய்ப்பு உள்ளது.