அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இடைநீக்கம்

அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் குணதிலகா கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, தனுஷ்க குணதிலகாவை அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் உடனடியாக இடைநிறுத்துவதுடன், அவரை எந்தத் தேர்வுக்கும் பரிசீலிக்கப் போவதில்லை என இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது.

மேலும், கூறப்படும் குற்றம் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை இலங்கை கிரிக்கெட் எடுக்கும், மேலும் மேற்கூறிய அவுஸ்திரேலியா நீதிமன்ற வழக்கு முடிவடைந்தவுடன், குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறித்த வீரர் தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் இன இலங்கையை கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது.

ஒரு வீரரின் அத்தகைய நடத்தைக்கு சம்பவம் குறித்த பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொள்வதற்கு ஆஸ்திரேலிய சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்கும் என்பதையும் இலங்கை கிரிக்கெட் வலியுறுத்த விரும்புகிறது என அது மேலும் தெரிவித்துள்ளது.