இலங்கையின் நிலைப்பாட்டை உன்னிப்பாக அவதானிக்கின்றது இந்தியா

சீனாவின் யுவான்வாங் 6 கப்பல் தனது பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ள இந்தியா இந்த கப்பல் தொடர்பில் இலங்கை எடுக்கவுள்ள நிலைப்பாட்டை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ளது.

கடலிற்குள் 200 கடல் மைல் தூரம் வரை காணப்படும் தனது பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் யுவான் வாங் கப்பல் நுழைவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

ஒடிசா கரையில் உள்ள அப்துல் கலாம் சோதனை நிலையத்திலிருந்து இந்தியா மேற்கொள்ளும் ஏவுகணை பரிசோதனைகளை கண்காணிப்பதற்காக விசேடமாக அனுப்பப்பட்ட சீனா இராணுவத்தின் வேவுகப்பலே இது என்கின்ற போதிலும் இந்த கப்பல் ஆராய்ச்சி கப்பல் என உத்தியோகபூர்வமாக பதியப்பட்டுள்ளது.

இந்தியாவின் பிரத்தியேக  விசேட பொருளாதார வலயத்தின் ஊடாக போர்க்கப்பல்கள் உட்பட யுத்த கப்பல்கள் செல்லமுடியும் என்கின்ற போதிலும் அனுமதியின்றி வெளிநாடு ஒன்று ஆராய்ச்சியில் ஈடுபடுவதை இந்திய சட்டம் தடை செய்கின்றது.

2019 இல் சீனாவின் ஆராய்ச்சி கப்பலான சி யான் 1 அந்தமானின் போட் பிளயரிற்கு அருகில் காணப்ட்டவேளை இந்திய கடற்படை அதனை வெளியேற்றியது.

சி யான் கப்பலும் ஆராய்ச்சி கப்பல் என்ற போர்வையில் செயற்படும் வேவுகப்பல் என கருதப்படுகின்றது – இந்த கப்பல் விவகாரத்தால் இந்திய கடற்படைக்கும் சீனாவிற்கும் இடையில் இராஜதந்தி மோதல் உருவானது ஆனால் இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக காணப்பட்டது.

இம்முறை யுவான் வாங் கப்பல் தனது பொருளாதார வலயத்திற்குள் நுழைய முயன்றால் இந்திய கடற்படை சி யான் கப்பல் விவகாரத்தில் நடந்துகொண்டது போன்றே நடந்துகொள்ளும் .

சீனா கப்பல் எங்கு செல்கின்றது என தெரிவிக்கப்படவில்லை ஆனால் சர்வதேச கடற்பரப்பிலேயே அது காணப்படவேண்டும் என சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

நாங்கள் தொடர்ச்சியாக அதன் நடமாட்டத்தை அவதானிக்கின்றோம் எங்களின் வான்வெளி கண்காணிப்புகள் அந்த கப்பலை கண்காணித்த வண்ணமுள்ளன எங்களின் ஆளில்லா விமானங்களும் எங்களின் நீண்டதூர கடல்சார் கண்காணிப்பு விமானங்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன என  அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இந்த கப்பல் எதனை கண்காணிக்கின்றது என்பதை கண்டறிவதற்கான திறனும் எங்களிற்குள்ளதுஇசர்வதேச கடற்பரப்பில் அந்த கப்பல் நிற்கின்ற வரை எங்களால் எதனையும் செய்ய முடியாது எங்கள் விசேட பொருளாதார வலயத்திற்குள் கப்பல் நுழைய முயன்றால் நடவடிக்கை எடுக்க முடியும் இது சாதாரண போர்கப்பலாக இருந்திருந்தால் எங்களால் சர்வதேச சட்டங்கள் காரணமாக எதனையும் செய்திருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

எனினும் வெளிநாட்டு ஆராய்ச்சி கப்பலை எங்களின் பிரத்தியே பொருளாதார வலயத்திற்குள் செயற்பட அனுமதிக்க முடியாது அந்த கப்பலால் எங்களின் கரையோரங்களை நெருங்க முடியாது  பல கடல்மைல் தொலைவிலிருந்து கண்காணிப்பில் ஈடுபடக்கூடிய சாதனங்கள் அந்த கப்பலில் உள்ளமை எங்களிற்கு தெரியும் ஆனால் அந்த கப்பல் சர்வதேச கடற்பரப்பில் உள்ளவரை எங்களால் எதுவும் செய்ய முடியாது எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

சீன கப்பலிற்கு எங்களின் அயல்நாடுகள் தங்களின் கடல்எல்லைக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கினாலே எங்களிற்கு பிரச்சினை ஏற்படும் நாங்கள் எங்கள் கடல்எல்லையை இலங்கை பங்களாதேசுடன் பகிர்ந்துகொள்கின்றோம் இந்த நாடுகளிற்கு அருகில் எங்களால் எங்கள் பிரத்தியேக பொருளாதார வலயத்தை நடைமுறைப்படுத்த முடியாது கடல் அடுத்தடுத்து இருப்பதே இதற்கு காரணம் என மற்றுமொரு இந்திய அதிகாரி தெரிவித்தார்.

இதன் காரணமாகவே நாங்கள் சர்வதேச கடல் எல்லையை கொண்டுள்ளோம் பங்களாதேஸ் யுவான் வாங் 6 கப்பல் சிட்டகொங்கில் தரித்து நிற்பதற்கோ அல்லது இலங்கை அந்த கப்பல் அம்பாந்தோட்டையில் தரித்து நிற்பதற்கோ அனுமதி வழங்கினால் அந்த கப்பல் எங்கள் கரையோரங்களிற்கு மிக அருகில் நின்று அனைத்தையும் கண்காணிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.