P-627 அமெரிக்கா கடலோர கடற்படை கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

அமெரிக்க அரசாங்கத்தினால் இலங்கை கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட P-627 அமெரிக்கா கடலோர கடற்படை கப்பல் நேற்று புதன்கிழமை காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இதற்கு கடற்படையினரால் நீர் விசிறி மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
115மீற்றர் நீளம் கொண்டது மற்றும் அதிகபட்ச 29 knots வேகத்தில் அடையும் திறன் கொண்டது. மேலும், 187 பணியாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் கடற்படையின் செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ற நவீன ஆயுதங்கள் மற்றும் இயந்திரங்களைக் கொண்டுள்ளது.
இந்த நிகழ்வில், முப்படை அதிகாரிகள், அமெரிக்கா தூதுவர் ஜூலி ஜியூன் சங் ஆகியோர் கலந்து கொண்டனர்.