
மாற்றுத்திறனாளிகளுக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் செயற்திட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் செயற்திட்டம் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையில் இடம்பெற்றது
காரைதீவு பிரதேச சபை தவிசாளர் தலைமையில் இடம்பெற்ற இக் ௬ட்டமானது, UNDP நிறுவனத்தின் அனுசரணையில் அந்த நிறுவனத்தின் அதிகாரிகள், பிரதேச சபை செயலாளர், உத்தியோகத்தர்கள், சமூக சேவை உத்தியோகத்தர், காரைதீவு பிரதேசத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர், செயலாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்
இக் ௬ட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக எதிர்காலத்தில் இவர்களிற்கான வாழ்வாதார உதவிகள், சுய தொழில் செய்வதற்கான உதவிகள் மற்றும் அவர்களின் இன்ப துன்ப நிகழ்வுகளிற்கும் உதவி வழங்குவதாகவும் அவர்களிற்கு தேவையான ஊன்றுகோல், wheel chair என்பனவற்றினை முன்னய காலங்களில் பெற்றுக் கொடுத்திருக்கின்றோம் இனிவரும் காலங்களிலும் UNDP மற்றும் ஏனைய நிறுவனங்கள் மூலம் பெற்றுக்கொடுக்க முயற்சி மேற்கொள்வதாகவும் தவிசாளர் உறுதியளித்தார்
இதனை UNDP அதிகாரிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் காரைதீவு பிரதேச சபையின் இச் செயற்பாடுகளை பாராட்டினார்கள்
