மரம் முறிந்து விழுந்து பெண்ணொருவர் உயிரிழப்பு
-பதுளை நிருபர்-
ஹாலிஎல பகுதியில் மரம் முறிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்தள்ளார்.
இச்சம்பவம் நேற்று புதன்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஹாலிஎல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெளித்தன்ன மாவத்தேகம ஹாலிஎல பகுதியில், வீதியால் சென்று கொண்டிருந்த பெண் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விசாரணைகளை ஹாலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
