
பாணில் கரித்துண்டு
-யாழ் நிருபர்-
யாழ். மருதனார் மட சந்தியில் அமைந்துள்ள வெதுப்பாக உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் கடையில் பாணில் கரிக்கட்டி சேர்த்து வேகவைக்கப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த வெதுப்பாக உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் கடையில் காலை வேளை பாண் வாங்கியவர் வீடு சென்று அதனை வெட்ட முற்பட்ட நிலையில் பாணுடன் கரிக்கட்டி சேர்ந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்வாறே அச்சுவேலிப் பகுதியில் உள்ள வெதுப்பக நிலையத்தில் வாங்கிய பாணில் குண்டூசி இருந்தமை அண்மையில் கண்டறியப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் சுகாதார தரப்பினர் நடவடிக்கை எடுத்தார்களா? என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
