பருவ மழை காலம் நிறைவடைந்ததும் காணி விடுவிப்பு

-யாழ் நிருபர்-

பருவ மழை காலம் நிறைவடைந்ததும் காணி விடுவிப்பு தொடர்பாக தீர்க்கமான முடிவினை மேற்கொள்ளும் வகையில் வடக்கிற்கு விஜயம் மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளதாக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்க மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அபிலாசைகளுக்கு தீர்வு காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி குறித்த உத்தரவாதத்தினை வழங்கியுள்ளதாக, வலி வடக்கு மயிலிட்டி துறைமுகத்திற்கு நேற்று புதன்கிழமை விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் தெரிவித்தார்.