
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு
-கல்முனை நிருபர்-
கல்முனை ஆதார வைத்தியசாலையில் மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் வைத்தியசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், பதில் வைத்திய அத்தியட்சகர் ஜெ.மதன், சத்திரசிகிச்சை நிபுணர் ஏ.டபிள்யூ. எம்.சமீம் உட்பட வைத்தியர்கள், தாதி உத்தியோகத்தர்கள், துறைசார்ந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இங்கு இணைய வழி வீடியோ மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலை சிரேஸ்ட சத்திர சிகிச்சை நிபுணர் அஜித் டீ.சில்வா மார்பகப்புற்று நோய் தொடர்பாக உரையாற்றினார்.
கல்முனை ஆதார வைத்தியசாலையில் மார்பகப் புற்றுநோய் தொடர்பான சிகிச்சைகள், ஆலோசனைகள், வழிகாட்டல்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
