விராத் கோலி அதிரடியில் வங்கதேசத்துக்கு 185 ரன்கள் இலக்கு
ஆஸ்திரேலியாவில் களைகட்டி வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 ஆட்டங்கள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. எதிர்பார்ப்பை எகிரச்செய்துள்ள 4வது சுற்று போட்டியில் இந்திய – வங்கதேச அணிகள் இன்று மோதி வருகின்றன.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல். ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்கினர். ரோகில் சர்மா 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டம் இழந்தார். இதையடுத்து விராத் கோலி களம் புகுந்தார். இந்த இணை பொறுப்பாக விளையாடி துரிதமான ரன் சேர்க்கையில் ஈடுபட்டது.
கேஎல் ராகுல் 32 பந்துகள் சந்தித்து 50 ரன்கள் எடுத்தார். அக்ஷர் படேல் 7 ரன்களுக்கும், ஹர்திக் பாண்டியா 5 ரன்களுக்கும், சூர்யகுமார் யாதவ் 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் எடுத்தார். ஒட்டுமொத்தமாக 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 184 ரன்கள் எடுத்தது. 185 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பங்களாதேஷ் களமிறங்கவுள்ளது.
