
தமிழ் மக்களின் பிரச்சினைகள் முன்னுரிமை அடிப்படையில் தீர்த்து வைக்கப்படும்
தேசிய நல்லிணக்கத்தின் மூலம் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அனைத்தும் முன்னுரிமை அடிப்படையில் தீர்த்து வைக்கப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியல் மறுசீரமைப்பு அமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஷவினால் ஏற்பாடு செய்யப்பட்ட, குறித்த அமைச்சின் நடமாடும் சேவையின் ஆரம்ப நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
