100 மில்லிமீற்றருக்கும் அதிக அளவில் மழைவீழ்ச்சி

நாட்டில் பல பகுதிகளில் இன்று திங்கட்கிழமை 100 மில்லிமீற்றருக்கும் அதிக அளவில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, எதிர்வரும் நாட்களிலும் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் நிலவுகின்றது.

அத்துடன், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவு வேளையில் மழை பெய்யக் கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.