
7 மில்லியன் பைசர் தடுப்பூசிகள் இன்று காலாவதியாகிறது
ஏறக்குறைய 7 மில்லியன் பைசர் தடுப்பூசிகள் இன்று திங்கட்கிழமை நள்ளிரவுடன் காலாவதியாகும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்றும் கூட மக்கள் தங்களின் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளலாம் என தொற்றுநோய் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.
தற்போது, 52% மக்கள் முழுமையாக தடுப்பூசியை பெற்றுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
