
துப்பாக்கி சூட்டில் இருவர் பலி
ஹிக்கடுவ, திராணகம பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் ஹிக்கடுவை பிரதேசத்தைச் சேர்ந்த 26 மற்றும் 47 வயதுடைய இருவர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து சந்தேகநபர்கள் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
படுகாயமடைந்தவர்கள் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
