சுண்ணாம்புக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில் பெக்கோ இயந்திரத்தை பயன்படுத்தி சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சுண்ணாம்புக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுப்பிட்டி பகுதியில் சுண்ணாம்புக்கல் அகழ்விற்கு ஈடுபடுத்தப்பட்ட மூன்று டிப்பர் வாகனம் மற்றும் , பொக்கோ இயந்திரம் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அச்சுவேவி பொலிஸார் தெரிவித்தனர்.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமையவாக இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள வாகன சாரதிகளை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.