தென் கொரியாவில் தேசிய துக்க தினம் அறிவிப்பு : இலங்கையர் ஒருவரும் பலி

தென் கொரிய தலைநகர் சியோலில் இடம்பெற்ற ஹலோவீன் (halloween) கொண்டாட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுள் இலங்கையர் ஒருவரும் உள்ளடங்குவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கண்டி பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் இலங்கையர்கள் கொல்லப்பட்டார்களா அல்லது காயமடைந்துள்ளார்களா என்பதைக் கண்டறிய சியோலில் உள்ள பொலிஸ் மற்றும் மருத்துவமனைகளுக்கு பிரதிநிதிகள் பணிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வெளிவிவகார அமைச்சு மற்றும் தென்கொரியாவிலுள்ள இலங்கை தூதரகம் ஊடாக அறிந்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, தென் கொரியாவின் இதுவரை சுமார் 19 வெளிநாட்டவர்கள் உட்பட 151 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் ஜனாதிபதி யூன் சுக்-யோல் இன்று தேசிய துக்க தினமாக அறிவித்துள்ளார்.