இலங்கை அணிக்கு 168 ஓட்டங்கள் இலக்கு

T20 உலகக் கிண்ணத் தொடரில், இன்று சனிக்கிழமை இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணிக்கு 168 ஓட்டங்களை நியூஸிலாந்து அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இன்றைய போட்டில் நாணய சுழற்சியை வென்று முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ஓட்டங்களை பெற்றது.

நியூஸிலாந்து அணி சார்பில் கிளென் பிலிப்ஸ் 10 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கலாக, 104 ஓட்டங்களை 64 பந்துகளில் பெற்றார்.

பந்து வீச்சில் இலங்கை அணிசார்பில் கசுன் ராஜித 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

மஹீஷ் தீக்ஷன, தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்க மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

168 ஓட்டங்களை பெற்று வெற்றியை தழுவும் நோக்கில் இலங்கை அணி துடுப்பாடுகிறது.