
குழந்தைகள் மத்தியில் பரவும் புதிய வைரஸ்
தற்போது சிறுவர்கள் மத்தியில் இன்புளுவன்சா வைரஸ் பரவுவது அதிகரித்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும், காய்ச்சல், சளி, இருமல் மற்றும் வாந்தி தொடர்ந்தால், பிள்ளைகளை பாடசாலை அல்லது பகல்நேர பராமரிப்பு நிலையங்களுக்கு அனுப்ப வேண்டாம், என அவர் பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
