மதுபானங்களின் தேவை வீழ்ச்சி

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 8 வீதமாக இருக்கும் வரி வருமானம் அடுத்த வருடம் 11 வீதமாக அதிகரிக்கப்பட வேண்டுமென, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இலங்கை கலால் உத்தியோகத்தர் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதனிடையே, கடந்த சில மாதங்களில் மதுபானங்களின் தேவை 40 சதவீதம் குறைந்துள்ளதாக கலால் ஆணையாளர் நாயகம் எம்.ஜே. குணசிறி தெரிவித்துள்ளார்.