எதிர்வரும் மூன்று நாட்களுக்கான மின்துண்டிப்பு அறிவித்தல்

வார இறுதி மற்றும் எதிர்வரும் திங்கட்கிழமை ஆகிய நாட்களுக்கான மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை 1 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு  தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் திகதி திங்கட்கிழமை 2 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி,

அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய இரு நாட்களும் A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V மற்றும் W ஆகிய வலயங்களில் 1 மணி நேரம் மாலை 5.30 முதல் இரவு 8.30 வரை.

அக்டோபர் 31 A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V மற்றும் W ஆகிய வலயங்களில் பகலில் 1 மணி நேரம் மற்றும் இரவில்1 மணி நேரம் மின்துண்டிப்பு இடம்பெறும்.