பொலிஸ் நிலையத்தில் பதற்றம் : 15 வயது சிறுவன் மீது துப்பாக்கி பிரயோகம்

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 15 வயது சிறுவன் காயமடைந்ததை அடுத்து, மாத்தறை திஹகொட பொலிஸ் நிலையத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தற்செயலாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 15 வயது சிறுவன் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்

பொலிசார் அந்த அதிகாரியை கைது செய்து மறு அறிவிப்பு வரும் வரை பணி இடைநீக்கம் செய்துள்ளனர்.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டியொன்றை நிறுத்தி, சோதனைக்கு உட்படுத்த முயற்சித்த சந்தர்ப்பத்தில், 55 வயதுடைய திஹாகொட பொலிஸ் உப பொலிஸ் பரிசோதகரின் துப்பாக்கி இயங்கியுள்ளது

இதன்போது, முச்சக்கர வண்டியில் பயணித்த 15 வயது சிறுவன் காயமடைந்துள்ளதாகவும் இதனால் தலை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.