
கள்ள நோட்டுடன் கடைக்கு வந்த பொலிஸ் பொறுப்பதிகாரி
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றின் பொறுப்பதிகாரி ஒருவரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் கடந்த திங்கட்கிழமை மாலை கடை ஒன்றிற்கு சென்று பொருட்களை வாங்கினர்.
அதன் பின்னர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நாணயத்தாள் ஒன்றினை கடைக்காரனிடம் கொடுத்துள்ளார். குறித்த நாணயத்தாளினை வாங்கி பார்த்த கடைக்காரர் அது கள்ளநோட்டு என பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் திருப்பி வழங்கினார்.
உடனே சுதாரித்துக் கொண்ட பொலிஸ் பொறுப்பதிகாரி அது ஏ.ரி.எம் இயந்திரத்தில் இருந்து கிடைத்த நாணயத்தாள் எனக்கூறிவிட்டு வேறு ஒரு நாணயத்தாளினை வழங்கிவிட்டு அங்கிருந்து அகன்றார்.
குறித்த கள்ளநோட்டு வேறு கடைகளில் இருந்து கிடைத்தது அல்லது வேறு நபர்களிடம் இருந்து கிடைத்தது என்றால் அது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். ஆனால் ஏ.ரி.எம் இயந்திரத்தில் இருந்து கிடைத்துள்ளது என குறித்த பொறுப்பதிகாரி கூறியமை மக்கள் மத்தியில் சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
