
முச்சக்கரவண்டி கட்டணங்களை குறைக்க நடவடிக்கை
பஸ்கள் மற்றும் பாடசாலை வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிமனையின் தலைவருமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தொழில்முறை முச்சக்கரவண்டி சங்கங்களுடன் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொழில்முறை முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
QR முறையின் கீழ் தொழில்முறை முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்க தீர்மானித்ததன் மூலம் கிலோமீட்டருக்கு அறவிடப்படும் கட்டணத்தை 20 ரூபாவால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
