
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் குழு சுட்டுக்கொலை
ஆப்கானிஸ்தானில் தலிபான் பாதுகாப்பு படையினரால் இஸ்லாமிய தீவிரவாதிகள் குழு ஒன்று சுட்டுக்கொல்லப்பட்டது.
தலைநகர் காபூலில் நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் இந்தக் குழு கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அண்மையில் மசூதி ஒன்றின் மீதும், பயிற்சி வகுப்பில் இருந்த மாணவர்கள் மீதும் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்களில் பெரும் எண்ணிக்கையிலான மக்களைக் கொன்ற சம்பவங்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாக, தலிபான் பாதுகாப்புப் படையினர் தெரிவிக்கின்றனர்.
