நாடாளுமன்ற கூட்டங்களை பார்க்க மாணவர்களுக்கு வாய்ப்பு

நாடாளுமன்றக் கூட்டங்கள் நடைபெறும் நாட்களில் பாடசாலை மாணவர்களுக்கு விவாதங்களைப் பார்க்க வாய்ப்பளிக்க நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு முடிவு செய்துள்ளது.

இதன்படிஇ பாராளுமன்ற அலுவகத்தின் பொதுக் கலரியில் இருந்து பாராளுமன்ற விவாதங்களை நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பு பாடசாலை மாணவர்களுக்கு இனி கிடைக்கப்பெறவுள்ளது.

கொவிட் சூழ்நிலை மற்றும் பாதுகாப்பு காரணங்களால், கடந்த செப்டம்பர் 20ஆம் திகதி முதல் நாடாளுமன்றத்தைப் பார்ப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதிலும்,  நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களில் விவாதங்களைப் பார்க்கும் வாய்ப்பு இதுவரை கிடைக்காதிருந்தது.

பாராளுமன்ற விவாதங்களைப் பார்க்க வரும் பாடசாலை மாணவர்களுக்காக, பாடசாலை அதிகாரிகள் கடிதம் மூலமாகவோ, தொலைநகல் (0112777473/ 0112777335) மூலமாகவோ அல்லது www.parliament.lk என்ற இணையதளம் மூலமாகவோ விண்ணப்பங்களை அனுப்பலாம்.