வடக்கின் மழைநிலைமை தொடர்பான அறிவித்தல்

நேற்று வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையான 24 மணித்தியாலத்தில் 60.4 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகி உள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன்  தெரிவித்தார்.

இதற்கமைய, குறித்த காலப் பகுதியில் கிளிநொச்சி அக்கராயனில் கூடியளவு மழைவீழ்ச்சியாக 60.4 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகி உள்ளதாக ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார்.

குறித்த காலப் பகுதியில் யாழ். மாவட்டத்தின் அச்சுவேலியில் 33.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், நெடுந்தீவில் 24.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், திருநெல்வேலியில் 23.0 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும்,  தெல்லிப்பழையில் 18.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகி உள்ளன.

கிளிநொச்சியில் 45.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும்,  இரணைமடுவில் 43.0 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், ஆனையிறவில் 29.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகி உள்ளன என்றார்.