கோழி இறைச்சியின் விலை குறைப்பு

கோழி இறைச்சியின் விலை இன்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது .

அதன்படி, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை 420 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது .

இந்நிலையில், 1500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1080 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக கோழி இறைச்சி விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.