
கோதுமை மாவின் விலை குறைப்பு
கொழும்பு – புறக்கோட்டை சந்தையில், கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் அறிவித்துள்ளது.
ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 290 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 265 ரூபாவாக காணப்படுகின்றது
