இந்திய தூதுவர் நெடுந்தீவுக்கு விஜயம்
-யாழ் நிருபர்-
நேற்று செவ்வாய்கிழமை யாழ். இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்டதாக யாழ். இந்திய துணைத்தூதுவராலயம் தெரிவித்துள்ளது.
நெடுந்தீவில் கல்விஇ பொது உள்கட்டமைப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான வளர்ச்சிப் பிரச்சினைகள் குறித்து பிரதேச செயலர் மற்றும் அரச அதிகாரிகளுடன் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களுடன் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் இந்திய புலமைப்பரிசில்பற்றி விளக்கமளித்ததோடு அங்கு மாணவர்களுக்கு பணப்பரிசுகள் வழங்கப்பட்டது.
