
தனியார் பேருந்து மீது இ.போ.ச பேருந்து தாக்குதல்
-கிளிநொச்சி நிருபர்-
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து தனியார் பேருந்தை வழி மறித்து தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியங்குளம் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து, குறிக்கப்பட்ட நேரத்தை தவறி யாழ் நோக்கி சென்றுகொண்டிருந்த வேளை தனியார் பேருந்து தனக்கான நேரத்தில் யாழ் நோக்கி சென்றுகொண்டிருந்தது.
இதன்போது, திடீரென வவுனியா மாவட்ட புளியங்குள பகுதியில் ஏ9 வீதியில் தனியார் பேருந்தின் முன்னால் இ.போ.ச பேருந்தை நிறுத்தி விட்டு, குறித்த பேருந்தில் இருந்து சிவில் உடையில் இருந்த சகோதர மொழியினர் தனியார் பேருந்து சாரதியையும் நடத்துனரையும் தவறான வார்த்தை பிரயோகம் பாவித்து திட்டியதுடன், தாக்குதல் நடாத்த முற்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொது மக்கள் தமது கண்டனங்களை தெரிவித்தனர்
பொது மக்களை தாக்குவதற்கு மற்றும் தாக்க முற்பட்டவர்களுக்கு உரிய தண்டணை கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறும் பயணிகள் கேட்டுகொண்டுள்ளனர்.
