பகிரங்க மன்னிப்பு கோரிய யாழ் முதல்வர்

-யாழ் நிருபர்-

யாழ். மாநகர சபையின் சுகாதார தேவைக்கான வாகன கொள்வனவுக்காக ஜப்பான் அரசாங்கம் வழங்கிய நிதியை பயன்படுத்துவதில் தவறிழைக்கப்பட்டுள்ளது, இதற்காக தான் வருத்தம் தெரிவிப்பதாக, சபையில் முதல்வர் வி.மணிவண்ணன் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்.

மேலும், ஜப்பான் அரசாங்கத்தின் நிதியை மீளளிக்குமாறு உள்ளூராட்சி ஆணையாளரால் தமக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் முதல்வர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, இந்த விடயம் வெளிநாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர நடைமுறைகளை பாதிக்கும்.எனவே, இதை தொடர்ந்தும் பேசுபொருளாக வைத்து சபையில் விவாதிக்காமல் முடிவுக்கு கொண்டுவருவது சிறந்தது என்று ஈ.பி.டி.பி. கட்சியின் உறுப்பினர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்ததுடன்,  நிதி மீளளிக்கும் தீர்மானத்தை சபையில் நிறைவேற்றுமாறும் கோரினார்.