
உக்ரைனின் நீர் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷ்யா தாக்குதல்
ரஷ்யாவின் தொடர் ராக்கெட் மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் உக்ரைனில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு நீர் விநியோகம் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 7ஆம் திகதி முதல் பல ராக்கெட் மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், உக்ரைனில் 30 மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பல நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தலைநகர் கீவ் நகரின் பல பகுதிகளில் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதல்களால் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
