அத்தியாவசிய பொருட்களின் விலை வீழ்ச்சி
சந்தையில் அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும், சந்தையில் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளதாகவும் வர்த்தக அமைச்சர் தெரிவித்ததாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அதன்படி,
பருப்பு 1Kg 685 ரூபாவிலிருந்து 398 ரூபாவாகவும்,
நாட்டரிசி 1Kg 220 ரூபாவிலிருந்து 165 ரூபாவாகவும்,
வெள்ளை பச்சையரிசி 1Kg 210 ரூபாவிலிருந்து 160 ரூபாவாகவும்,
சீனி 1Kg 375 ரூபாவிலிருந்து 275 ரூபாவாகவும்,
கோதுமை மா 1Kg 395 ரூபாவிலிருந்து 275 ரூபாவாகவும்,
வீழ்ச்சியடைந்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இங்கு தெரிவித்தார்.
எவ்வாறாயினும், பால் மா விலை குறைப்பு தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும், இந்த விலை குறைப்பு தொடர்பான சந்தை நிலவரங்கள் குறித்து வர்த்தக அமைச்சர் ஊடகவியலாளர் சந்திப்பின் மூலம் விளக்கமளிப்பார் எனவும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
