போதை மருந்து உபயோகித்த நால்வர் கைது

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் அரசடி பகுதியில் ஊசி மூலம் ஹெரோரோயின் போதை மருந்து எடுத்துக் கொண்டிருந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் நால்வரும் 2 கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான அணியினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களில் இருவருக்கு ஏற்கனவே திறந்த நீதிமன்ற பிடி விறாந்து ஐந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட நபர்கள் தாங்கள் பளைப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் குறித்த போதை பொருளை பெற்றுக் கொள்வதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.