சர்வதேச விமானநிலையத்தின் 3ஆம் ஆண்டு நிறைவு

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையத்தின் 3ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு சமய நிகழ்வும் கேக் வெட்டும் நிகழ்வும் நேற்று திங்கட்கிழமை பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் இடம்பெற்றது.

இதில் மூன்று ஆண்டுக்கான நிறைவின் பிரித்பாரயணம், சர்வமத ஆசியும் இடம்பெற்றதுடன் கேக்வெட்டும் சம்பிரதாயமும் நடைமுறையும் இடம்பெற்றன.

இதனை யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையத்தின் பிரதான முகாமையாளர் ஆர்.எஸ்.டி குமாரசிறி ஜயதிலக,மற்றும் விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரி டி.எஸ்.ஜெந்தமால் அபயசிங்க, நிர்வாக அதிகாரி ஹபீர் ஆட்டிஸ் உள்ளிட்ட பதவி நிலைய உத்தியோகத்தர்கள் , மதத்தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.