குளவிக்கொட்டுக்கு இலக்கான மாணவர்கள்

வவுனியாவில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா போகஸ்வெவ வித்தியாலயத்தில் இன்று திங்கட்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாடசாலையில் காலை வேளை ஒன்றுகூடலின் போது அங்கிருந்த குளவிக்கூடு கலைந்தமையினால் இவ் அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 40 பேர் குளவிக்கொட்டுக்கு உள்ளாகி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலையின் அருகில் இருக்கும் குறித்த குளவிக்கூட்டை அகற்றுமாறு வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவித்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர்.

குளவிக்கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்கான மாணவர்கள்