பாண்டிருப்பில் சிரேஸ்ட பிரஜைகள் கௌரவிப்பு

-கல்முனை நிருபர்-

 

கல்முனை வடக்கு பிரதேச செலகப்பிரிவிற்குட்பட்ட மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் ஏற்பாட்டில் சிரேஸ்ட பிரஜைகளை கௌரவிக்கும் நிகழ்வு பாண்டிருப்பு கலாசார மத்திய நிலையத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் நடைபெற்றது.

இங்கு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கல்முனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை, துறைவந்தியமேடு, சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை ஆகிய கிராமங்களிலுள்ள ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 150 இற்கும் மேற்பட்ட சிரேஸ்ட பிரஜைகள் மலர்மாலை அணிவித்து பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். ஐ.எல்.எம்.றிபாஸ் கலந்து கொண்டார்.

அத்துடன் கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின் இணைப்பாளர் டாக்டர் எம்.ஏ. நபீல், கல்முனை வடக்கு மாதர் சங்கங்களின் கிராமி அபிவிருத்தி உத்தியோகத்தர் வசந்தினி யோகேஸ்வரன், சுதேச வைத்திய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.கபிலா உட்பட மாதர் சங்கங்களின் உறுப்பினர்கள், சிரேஸ்ட பிரஜைகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.