கோடாவுடன் 29 வயது நபர் கைது

-யாழ் நிருபர்-

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோப்பாய் பகுதியில் 210 லீட்டர் கோடாவுடன் 29 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பினை மேற்கொண்ட கோப்பாய் பொலிஸார் குறித்த சந்தேக நபரை கோடாவுடன் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரிடமான மேலதிக விசாரணையின் பின்னர், அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.